Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொம்பு வச்ச சிங்கம்டா… வெளிநாடுகளில் ரிலிஸ் ஆவதில் சிக்கல்!

கொம்பு வச்ச சிங்கம்டா… வெளிநாடுகளில் ரிலிஸ் ஆவதில் சிக்கல்!
, புதன், 12 ஜனவரி 2022 (15:46 IST)
சசிகுமார் நடித்த கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும் நிலையில் இப்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலிஸ் ஆக உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருந்த வலிமை உட்பட ஒரு சில திரைப் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து பொங்கல் ரிலீஸில் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சசிகுமாரின் படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வரும் நிலையில் சுந்தர பாண்டியன் படத்துக்கு பிறகு இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரனோடு அவர் இணைந்துள்ள படம் மீது கொஞ்சம் எதிர்பார்ப்பு உள்ளது.

ஆனால் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் வெளிநாடுகளில் ரிலிஸ் செய்வதற்காக அந்த நாடுகளில் செய்யப்பட வேண்டிய சென்ஸார் வேலைகள் முடியவில்லை என்பதால் அங்கு ரிலீஸ் செய்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாடிவாசல் படத்துக்கு இவ்வளவு டிமாண்டா? ஓடிடி விற்பனையில் சாதனை!