ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வெளியாக உள்ள வார் 2 படத்தில் சில க்ளாமர் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெரோப் நடித்து 2019ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த படம் வார். இதன் இரண்டாம் பாகம் தற்போது அயன் முகர்ஜி இயக்கத்தில் தயாராகியுள்ளது. இதில் ஹ்ரித்திக் ரோஷன், என்டிஆர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் இந்தி நடிகை கியாரா அத்வானி முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
சமீபத்தில் வார் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வீடியோக்கள் வெளியானது. அதில் கியாரா அத்வானி பச்சை நிற பிகினி உடையில் தோன்றும் கவர்ச்சி காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இது பெரும்பாலான இளைஞர்களை ஈர்த்த நிலையில், அதிக கவர்ச்சியாக இருப்பதாக புகார்களும் எழுந்தன.
இந்நிலையில் அதீத கவர்ச்சியாக இருப்பதால் அந்த காட்சியை நீக்குமாறு சென்சார் போர்டு பரிந்துரைத்ததாகவும், அந்த காட்சியை படக்குழு நீக்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K