தென்னிந்தியாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் ஜானி மாஸ்டர். இவர் நடனம் வடிவமைத்த புட்ட பொம்மா, அரபிக்குத்து மற்றும் ரஞ்சிதமே போன்ற பாடல்கள் வைரல் ஹிட்டாகின. அதுமட்டுமில்லாமல் அந்த பாடல்களின் ரீல்ஸ்களால் சமூகவலைதளங்கள் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் இப்போது அவரே ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பெண் அவர் மேல் பாலியல் புகார் அளித்தார். ஜானியிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றிய போது தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாக அளித்தக் குற்றச்சாட்டை அடுத்து சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் தன் மீதானக் குற்றச்சாட்டை மறுத்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் கேம்சேஞ்சர் படத்தில் ஒரு பாடலுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார். அந்த பாடலுக்கான ரிகர்சல் வீடியோவை கியாரா அத்வானி பகிர்ந்து ஜானி மாஸ்டரோடு பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். பாலியல் குற்றச்சாட்டு சாட்டப்பட்ட ஒருவரைப் பாராட்டுவதா எனக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அந்த பதிவில் இருந்து ஜானி மாஸ்டர் பெயரை நீக்கியுள்ளார்.