எனது கணவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரை பிரிய தயார் என ஜானி மாஸ்டர் மனைவி சவால் விட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜானி மாஸ்டர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் 16 வயதிலிருந்து தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறியுள்ளார். இது குறித்து ஜானி மாஸ்டர் மனைவி ஆயிஷா கூறுகையில் அந்த பெண்ணின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் ஆதாரம் காட்டினால் நான் என் கணவரை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
எங்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது என்றும் அவரை எனக்கு நன்றாக தெரியும் என்று அவரது குணம் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் வகையில் மோசமானது இல்லை என்றும் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு கூறியிருக்கும் இதே பெண்தான் பல தொலைக்காட்சிகளில் ஜானி மாஸ்டர் தனக்கு பல உதவிகள் செய்திருப்பதாகவும் அவருக்கு நன்றி உள்ளவராக இருப்பதாகவும் கூறியிருந்தார். அப்போதெல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக வில்லையா? திடீரென இப்போது அவர் புகார் கூற என்ன காரணம்? அவருடைய நல்ல பெயரை கெடுக்க சிலர் சதி செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.