Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல இந்தி நடிகரை சந்தித்த குஷ்பூ....புகைப்படம் வைரல்

Advertiesment
kushboo ajay devkhan
, திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (20:43 IST)
பிரபல இந்தி நடிகரை சந்தித்து நட்பு பாராட்டியுள்ளார் நடிகை குஷ்பு.

தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் ரஜினி , கமல், கார்த்தி, பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் என பல  முன்னணி  நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது, குணச்சித்திர நடிகையாகவும் பாஜக   நிர்வாகியாக பொறுப்பு வகித்து வரும் குஷ்பு சமீபத்தில் நடிகை ரம்பாவின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அவரது மகளும், ரம்பாவின் மகளும்கூட பள்ளித் தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த  நிலையில், இந்தி சினிமாவில் முன்னணி நடிகர் அஜய் தேவ்கானை சந்தித்துள்ளார் குஷ்பு. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், என் ஹீரோவை சந்தித்தது எனக்கு மகிழ்ச்சியான தருணம். இவர் மிகவும் எளிமையான மனிதர்.நீங்கள் எனக்காக நேரம் ஒதுக்கியதற்காக நன்றி. மீண்டும் நாம் சந்திப்போ எனத் தெரிவித்துள்ளார்.

மின்சார கனவு படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடித்த, காஜோல், அஜ்யதேவ்கானின் மனைவியாவார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் இணைந்த பிக்பாஸ் போட்டியாளர்!