Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ஆண்டுகளை நிறைவு செய்த காக்க காக்க… சூர்யா நெகிழ்ச்சி பதிவு!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (07:39 IST)
சூர்யா கமர்ஷியல் வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த போது அவருக்கு அப்படி ஒரு வெற்றியைக் கொடுத்த படம்தான் காக்க காக்க. மின்னலே படம் மூலமாக அறிமுகமாக கௌதம் மேனன்  அடுத்து இயக்கிய ஆக்‌ஷன் படத்தில் சூர்யா, ஜோதிகா, டேனியல் பாலாஜி, ஜீவன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்துப் பாடல்களையும் தாமரை எழுத மிகப்பெரிய அளவில் சார்ட்பஸ்டர் ஹிட்களாக பாடல்கள் அமைந்தன. படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதை அடுத்து சூர்யா தன்னுடைய அடுத்த கட்டத்துக்கு சென்றார்.

இந்நிலையில் காக்க காக்க திரைப்படம் வெளியாகி தற்போது 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் டிவிட்டரில் “எனக்கு அனைத்தையும் கொடுத்த படம் காக்க காக்க. அன்புச்செல்வன் எப்போதும் என் மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரம்.  படத்தின் தொழில்நுட்பஜ் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். என் சகநடிகர்கள் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் ஆகியோருக்கு நன்றி. ஜோதிகாதான் முதன் முதலாக இந்த படம் பற்றி என்னிடம் பேசினார்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments