நடிகர் சூர்யா தனது தம்பியை கார்த்தியை வைத்து புதிய படம் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி 3 கோடிக்கும் அதிகமான ரசிகர்களைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சூர்யா- ஜோதிகா தங்களின் 2 டி என்டர்டெயினர் சார்பில், தம்பி கார்த்தி – அதிதி ஷங்கர் நடிப்பில் விருமன் என்ற படத்தை தயாரித்திருந்தார். இப்படம் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது தம்பி கார்த்தியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
இப்படத்தை 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கவுள்ளார். இப்படத்தில், கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.