பாகுபலி இரண்டு பாக படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது. ஆனால் அதன் பின்னர் அவர் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய இரு படங்களும் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் பட டீசரும் கடுமையான கேலிகளுக்கு ஆளானது. பாகுபலிக்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் பிரபாஸ் தவித்து வரும் நிலையில் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்குக் காரணம் அந்த படத்தின் இயக்குனர் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் என்பதுதான்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை பாதிக்கு மேல் முடிந்துள்ளது. இந்நிலையில் இப்போது படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பிரசாந்த் நீலுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன். மேலும் படத்தில் தன்னுடையக் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் கே ஜி எஃப் புகழ் யாஷ் ஒரு சிறிய கௌர வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கே ஜி எஃப் ராக்கியாகவே இந்த படத்தில் அவர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.