Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘கே.ஜி.எஃப். 2’ - 6 நாட்களில் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு?

Advertiesment
‘கே.ஜி.எஃப். 2’ - 6 நாட்களில் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு?
, செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (17:27 IST)
கே.ஜி.எஃப். 2 வெளியாகி இரண்டாவது வாரம் தொடங்கியுள்ள நிலையில் தற்போதும் கூட்டம் குறையாமல் வசூலில் வெற்றி நடைப் போட்டு வருகிறது. 

 
கன்னடத்தில் எடுக்கப்பட்ட கேஜிஎஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கேஜிஎஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 
 
இந்நிலையில் படம் வெளியாகி இரண்டாவது வாரம் தொடங்கியுள்ள நிலையில் தற்போதும் கூட்டம் குறையாமல் வசூலில் வெற்றி நடைப் போட்டு வருகிறது. ‘கே.ஜி.எஃப். 2’ படம் வெளியான 5 நாட்களில், ஒட்டுமொத்தமாக 617.45 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இதில் இந்தியில் மட்டும் இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. படத்திற்கான வரவேற்பு அதிகரித்து காணப்படுவதால், 2 வாரங்களில் வசூலில் சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெல்சனின் அடுத்த படம்…. வதந்திகளுக்கு டிவிட்டரில் பதில்!