Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெல்சனின் அடுத்த படம்…. வதந்திகளுக்கு டிவிட்டரில் பதில்!

Advertiesment
நெல்சனின் அடுத்த படம்…. வதந்திகளுக்கு டிவிட்டரில் பதில்!
, செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (17:22 IST)
பீஸ்ட் படத்தின் மோசமான விமர்சனங்களை அடுத்து ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் இயக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. படத்தின் மோசமான திரைக்கதை காரணமாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். நேற்றே சமூகவலைதளங்களில் மீம்களும் ட்ரோல்களும் உருவாகி பரவின. இந்நிலையில் இன்று கேஜிஎப் 2 ரிலீஸாகி மிகப்பெரிய பாராட்டுகளை ரசிகர்களிடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று பீஸ்ட் இரண்டாம் நாளில் நகர்ப்புற பகுதிகளை தவிர மற்ற புறநகர் பகுதிகளில் பெரிய வரவேற்பு இல்லை என சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளே திரையரங்குகள் காலியாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

இதனால் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன. இதனால் அவர் அடுத்து இயக்கவுள்ள ரஜினி படத்தில் மாற்றங்கள் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி ரஜினியிடம் பேசியுள்ளதாகவும் இயக்குனரை மாற்றலாமா என அவரிடமே கேட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக ரஜினி காத்திருக்கும் நிலையில் தோல்விப் படம் தந்த நெல்சனையே இயக்க சொல்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் இப்போது நெல்சன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தன் சுயவிவரக் குறிப்பில் தான் இயக்கிய படங்களின் வரிசையில் தலைவர் 169 படத்தையும் இணைத்துள்ளார். இதனால் அவர் ரஜினி படத்தை இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே தோன்றுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சன் பிக்சர்ஸோடு கூட்டணி… மீண்டும் இணைகின்றனரா சிறுத்தை சிவா & அஜித்!