Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 10 January 2025
webdunia

மலையாள சினிமாவில் பாலியல் சுரண்டல் விவகாரம்… ராதிகாவிடம் சிறப்புப் புலனாய்வு பிரிவு விசாரணை!

Advertiesment
மலையாள சினிமாவில் பாலியல் சுரண்டல் விவகாரம்… ராதிகாவிடம் சிறப்புப் புலனாய்வு பிரிவு விசாரணை!

vinoth

, திங்கள், 2 செப்டம்பர் 2024 (13:11 IST)
மலையாளத் திரை உலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நிலையில் பல முன்னணி நடிகர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதனால் மோகன்லால் தலைமையிலான மலையாள நடிகர் சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டு அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மலையாள சினிமா மிகவும் ஆரோக்யமாகவும், கலாரீதியாகவும் பல படங்களைக் கொடுத்து வருவதாகப் பாராட்டுகள் குவிந்து வந்தன. ஆனால் இப்படி ஒரு செய்தி வெளியாகி அந்த திரையுலகின் கொடூர முகத்தை தோளுரித்துக் காட்டியுள்ளது. இது சம்மந்தமாக பல நடிகைகள் அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ராதிகா பகிர்ந்த  தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதில் “நடிகைகளின் கேரவனில் ரகசியக் கேமராக்களைப் பொருத்தி அவர்களின் நிர்வாணக் காட்சிகளை படமாக்குகிறார்கள். அதனை நடிகர்கள் படப்பிடிப்புத் தளத்தில் அமர்ந்து ஒன்றாகப் பார்த்து ரசிப்பதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். அதனால்தான் நான் ஹோட்டலில் தங்கி ஆடையை மாற்றிக் கொண்டேன்.’ என ராதிகாக் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் கூறிய இந்த தகவல் சம்மந்தமாக தற்போது இந்த பிரச்சனையை விசாரிக்க உருவாக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு ராதிகாவிடம் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களின் எதிர்மறை விமர்சனம்… விசில் போடு பாட்டை மாற்றிய வெங்கட்பிரபு!