Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குக்கூ குக்கூ… கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாறிய எஞ்சாயி எஞ்சாமி!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (09:09 IST)
மிகப்பெரிய ஹிட்டாகியுள்ள எஞ்சாயி எஞ்சாமி பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றியுள்ளனர் கேரள போலீஸார்.

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் இரு வாரங்களுக்கு  எஞ்சாய் எஞ்சாமி பாடல் யு டியூபில் வெளியானது.  இந்த பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுத தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர். குரலில்  ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோவின் இணையப்பக்கத்தில் இந்த பாடல் வெளியானது. வெளியானதில் இருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த பாடல் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் இப்போது இந்த பாடல் யுடியுபில் 15 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது. தமிழில் பெரிய நடிகர்களின் சினிமாப் பாடல்களுக்குக் கூட கிடைக்காத வரவேற்பு இந்த தனியிசைப் பாடலுக்குக் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த பாடலின் வரிகளை மாற்றி கேரள போலிஸார் கொரோனா விழிப்புணர்வுக்காக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த பாடல் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments