Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுசீந்திரன் படத்தில் நடித்த 7 நடிகைகளுக்கு முதலமைச்சர் கோப்பை

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (19:01 IST)
கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் தற்போது 'கென்னடி கிளப்', 'ஏஞ்சலினா' மற்றும் 'சாம்பியன்' என ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவர் இயக்கி வரும் 'கென்னடி கிளப்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது
 
பெண்கள் கபடி விளையாட்டு குறித்த விறுவிறுப்பான இந்த படத்தில் நிஜ கபடி வீராங்கனைகள் ஏழு பேர் நடித்துள்ளனர் என்பதால் இந்த படத்தின் கபடி விளையாட்டு காட்சிகள் மிக இயல்பாக வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் இந்த 7 வீராங்கனைகளின் நிஜ கபடி டீமான வெண்ணிலா கபடிக்குழு தற்போது முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி தொடரின் சாம்பியன் ஆகியுள்ளது. இந்த டீமுக்கு தமிழக அரசு ரூ.12 லட்சம் பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கியுள்ளது. இது வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி 'கென்னடி கிளப்' படக்குழுவினர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது
 
பாரதிராஜா மற்றும் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த கென்னடி கிளப் படத்தில் காயத்ரி, சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசையில் குருதேவ் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments