Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி இப்படித்தான்! விஷ்ணு விஷாலின் அதிரடி முடிவு!

இனி இப்படித்தான்! விஷ்ணு விஷாலின் அதிரடி முடிவு!
, திங்கள், 31 டிசம்பர் 2018 (12:26 IST)
வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விஷ்ணு விஷால். சுசீந்திரன் இயக்கிய இப்படம் பெரும் வெற்றி பெற்றது. ஆனாலும் விஷ்ணு விஷாலுக்கு படங்கள் பெரிய அளவில் வந்து குவியவில்லை. 


 
இருப்பினும் அவர் நடித்த முண்டாசுப்பட்டி, வேலைனு வந்தா வெள்ளக்காரன் ஆகிய படங்கள் நல்ல வசூலை குவித்தன. இடையில் சில படங்கள் அவருக்கு சரியாக போகவில்லை. சமீபத்தில் வந்த ராட்சசன் படம் விஷ்ணு விஷாலுக்கு மிகப் பெரிய திருப்பமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றி தயாரிப்பாளர்களை விஷ்ணு விஷால் பக்கம் திரும்ப வைத்தது. ராட்சசன் படத்தை தொடர்ந்து அவர் நடித்து வெளிவந்த சிலுக்குவார் பட்டி சிங்கம் படமும் வெற்றி பெற்றதால் அவரது மார்க்கெட் மேலும் உயர்ந்துள்ளது.
 
இதனால் தொடர்ந்து இதுபோன்ற நகைச்சுவை வேடங்களில் நடிப்பது என்ற கொள்கையில் விஷ்ணு விஷால் கவனமாக இருக்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாரா வழியில் ஹன்சிகா