ரசிகர்களிடம் மாட்டிக் கொண்ட கீர்த்தி சுரேஷ்…பாதுகாப்பாக மீட்ட ஊழியர்கள்

Webdunia
சனி, 27 மே 2023 (21:15 IST)
தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகின் முன்னணி  நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர்,  பைரவா, மகாநடி, தானா சேர்ந்த கூட்டம், ரெமோ, சர்க்கார்,  உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் நானியுடன் இணைந்து இவர் நடித்திருந்த தசரா என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலீட்டியுள்ளது.

தற்போது, மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி  நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இப்படத்தின் 2 வது சிங்கில் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த நிலையில்,  இன்று தன் குடும்பத்தினருடன் கீர்த்தி சுரேஷ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனத்திற்குப் பின், ரங்க நாயகர் மண்டபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து, பிரகாரத்தை விட்டு வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.

.உடனே தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் கீர்த்தி சுரேஷை மீட்டு பேட்டரி கார் மூலம் அவர் கார் இருக்கும் இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா, தமன்னா பெயரில் போலி வாக்காளர் பட்டியல்: ஹைதராபாத்தில் பரபரப்பு - காவல்துறை வழக்குப்பதிவு

ஹீரோக்களுக்காகதான் கதை… ஹீரோயின்களுக்கு கவர்ச்சி மட்டும்தான்… ராதிகா ஆப்தே ஆதங்கம்!

நாகார்ஜுனாவின் நூறாவது படத்தில் இந்த ஹீரோயினும் இருக்கிறாரா?

அந்த நடிகர்தான் என் ஃபேவரைட்… அவருடன் இணைந்து நடிக்கவேண்டும்- ருக்மிணி வசந்த் ஆசை!

பிரியங்கா மோகன் நடிக்கும் ‘Made in Korea’... கதைக்களம் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments