முன்னணி நடிகரோடு பாலிவுட்டில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

vinoth
வியாழன், 27 மார்ச் 2025 (11:02 IST)
கீர்த்தி சுரேஷ், மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கதாநாயகியாகவும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் அவரின் முதல் படம் ஏ எல் விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ திரைப்படம்தான். அதன் பின்னர் வெளியான ரஜினி முருகன் படம் அவரை முன்னணி நடிகையாக்கியது.

இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் வைத்திருக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள அவர் இடையில் நடிகையர் திலகம் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். அதன் பின்னர்  பெண்குயின், சாணிக் காயிதம் மற்றும் ரகு தாத்தா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதைகளிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் ‘பேபி ஜான்’ திரைப்படம் மூலமாக அவர் இந்தி சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் படுதோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் தன்னுடைய இரண்டாவது படத்தில் ஒப்பந்தம ஆகியுள்ளார் கீர்த்தி. ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments