Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த நடிகை என் ஆடைகளை மாற்ற சொன்னார்… பிரபல தொகுப்பாளர் DD பகிர்ந்த தகவல்!

Advertiesment
அந்த நடிகை என் ஆடைகளை மாற்ற சொன்னார்… பிரபல தொகுப்பாளர் DD பகிர்ந்த தகவல்!
, புதன், 19 மார்ச் 2025 (15:12 IST)
விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒருவராக மாறிப்போனவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் அதிகமாக அறியப்பட்டது விஜய் டிவியின் காபி வித் டிடி மூலமாகதான். ஆனால் சமீபகாலமாக இவர் எந்த நிகழ்ச்சியிலும் தோன்றுவதில்லை. இடையில் அவரின் திருமண வாழ்க்கையும் முறிந்து போனது.

இதற்கிடையில் அவர் முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டார். பொது மேடைகளில் அவர் வாக்கிங் ஸ்டிக் உதவியோடு நடந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இது சம்மந்தமாக தற்போது அவர் நான்காவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் அவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். அப்படிக் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவர் தனக்கு நடந்த ஒரு மோசமான சம்பவத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் “நான் ஒரு நிகழ்ச்சியை நேர்காணல் செய்தேன். அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த சேலை போலவே நானும் அணிந்திருந்தேன். அதனால் அவர் என்னை ‘நீங்கள் ஆடையை மாற்றிக் கொள்ள முடியுமா’ எனக் கேட்டார். ஆனால் என்னிடம் வேறூ ஆடை இல்லை. ஆனாலும் நான் அவரை மிகவும் மரியாதையாகதான் அந்த நேர்காணலில் நடத்தினேன். ஆனாலும் அவர் அப்படி சொன்னது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மம்மூட்டி உயல்நலம் பெறவேண்டி சபரிமலையில் பூஜை செய்யும் மோகன்லால்!