Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படக்குழுவினர்!

ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படக்குழுவினர்!
, வியாழன், 21 டிசம்பர் 2023 (08:55 IST)
கேஜிஎப், காந்தாரா உள்பட சூப்பர் ஹிட் படங்களை எடுத்த ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.  இந்த நிலையில் இந்த படத்திற்கு ’ரகு தாத்தா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பேமிலி மேன் சீரியஸுக்கு கதை எழுதியவர்களில் ஒருவரான சுமன் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ஆனந்த் ராஜ், ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். யாமினி ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இப்போது மொத்த ஷூட்டிங்கும் கடந்த மே மாதமே நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் ரிலீஸ் சம்மந்தமாக எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் இப்போது ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என ஒரு வீடியோ துணுக்கையும் வெளியிட்டுள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகள் கொண்டாடும் பாட்டு ஆயிடும் போல… ரசிகர்களைக் கவர்ந்ததா அயலான் செக்ண்ட் சிங்கிள்!