Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா 46 படத்தில் இவர்தான் கதாநாயகியா?... அதிரடியாக நடந்த மாற்றம்!

vinoth
வியாழன், 24 ஏப்ரல் 2025 (11:13 IST)
சூர்யா நடிப்பில் உருவான  ‘கங்குவா’ திரைப்படம் பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் ரிலிஸாகி படுதோல்விப் படமானது. சூர்யாவின் மூன்று ஆண்டுகால உழைப்பு வீணாக்கப்பட்டுள்ளது என அவரின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். சூர்யா கடைசியாக திரையரங்குகளில் ஒரு வணிக ரீதியான வெற்றிப்படம் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது எனப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதனால் உடனடியாக ஹிட் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் சூர்யா உள்ளார்.

அதன் காரணமாகக் குறுகிய கால படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் மே 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘சூர்யா 45’ படத்தில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களின் இயக்குனர் வெங்கட் அட்லூரியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவருக்குப் பதில் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் சூர்யாவோடு ‘தானா சேந்த கூட்டம்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவை வைத்து படமெடுத்தால் எனக்கு ரூ.20 கோடி தர வேண்டும்: வெற்றிமாறனுக்கு தனுஷ் நிபந்தனை?

ஜொலிக்கும் உடையில் மாளவிகா மோகனின் க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் விண்டேஜ் ஸ்டைல் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

வகுப்பறையில் இருக்கும் மக்குப் பையன் போல உணர்கிறேன்… பறந்து போ நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேச்சு!

நடிகை இலியானாவுக்கு இரண்டாவது ஆண்குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments