கீர்த்தி சுரேஷ் கொண்டாடிய தல பொங்கல் நிகழ்ச்சியில் தளபதி விஜய் கலந்து கொண்ட சர்ப்ரைஸ் அளித்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு சமீபத்தில் திருமணமான நிலையில் அவர் தல பொங்கலை கொண்டாடினார். அவர் கொண்டாடிய பொங்கல் திருவிழாவில் தளபதி விஜய் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய பொங்கல் தினத்திற்காக விஜய் செய்த வாழ்த்து பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சமீபத்தில் திருமணமான கீர்த்தி சுரேஷ், விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் தயாரிப்பில் உருவாகி வரும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தளபதி விஜய் கலந்து கொண்டார். அவருடன் கீர்த்தி சுரேஷ், மமீதா, உள்பட சில நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.