கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் மீண்டும் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்தது. அந்த படமும் சுமாரான வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இப்போது இந்த நிறுவனம் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகும் ஒன்ஸ்மோர் படத்தைத் தயாரித்து வருகிறது. அதே போல ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ஹேப்பி எண்டிங் மற்றும் சசிகுமார் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் அடுத்து அந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படத்தைப் புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏப்ரலில் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.