லாக்டவுன் நேரத்தில் வயலில் இறங்கி நாற்று நடும் பிரபல நடிகை
லாக்டவுன் விடுமுறையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல நடிகை ஒருவர் டிராக்டரில் தனது நிலத்தில் உழுத வீடியோ வைரலாகிய நிலையில் தற்போது அந்த நிலத்தில் நாற்று நடும் வீடியோவை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
லாக்டவுன் விடுமுறையில் பெரும்பாலான நடிகர் நடிகைகள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் அழகான கவர்ச்சியான சமூக கருத்துள்ள வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்து வருகிறது
இந்த நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் நடிகை கீர்த்தி பாண்டியன் ஏற்கனவே தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டர் வைத்து நிலத்தை உழுத வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் அதே நிலத்தில் நாற்று நடும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். நாற்று நடும் பெண்களுக்கு இடையே கீர்த்தி பாண்டியன், சார்ட்ஸ் மட்டும் அணிந்து நாற்று நடும் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது
இருப்பினும் லாக்டவுன் நேரத்தில் இப்படி வெளியில் சுற்றலாமா என ரசிகர்கள் கேட்டபோது, இது பொது இடம் அல்ல என்றும் தனது தந்தைக்கு சொந்தமான இடம் என்பதால் ஊரடங்கு உத்தரவை தான் மீறவில்லை என்றும் கீர்த்தி பாண்டியன் பதிலளித்துள்ளார். டிராக்டரில் உழுவது, நாற்று நடுவது ஆகிய வீடியோக்களை அடுத்து அடுத்ததாக களை எடுப்பது, கதிர் அறுப்பது போன்ற வீடியோக்களை விரைவில் அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது