பிக்பாஸிற்கு பிறகு முதன் முறையாக தனது அம்மாவுடன் கவின் - நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!
Advertiesment
, புதன், 9 அக்டோபர் 2019 (10:19 IST)
பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களுள் அதிகம் விமர்சிக்கப்பட்டு பின்னர் ரசிக்கப்பட்டவர் கவின். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். பின்னர் ஒரு சில காரணத்தால் அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
அதையடுத்து நடுப்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஓடவில்லை. பின்னர் பிக்பாஸில் பங்கேற்பதற்காக வாய்ப்பு அவருக்கு கிடைக்க அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டார். ஆனால், அந்நிகழ்ச்சியில் கொடுத்த ரூ.5 லட்சம் சலுகை தொகையை எடுத்துக்கொண்டு பாதியிலேயே வெளியேறிவிட்டார். இதை பற்றி கவின் கூறும்போது, கடந்த இரண்டு வருடங்களாக என்னைத் தொலைத்த நான் இந்த வாய்ப்பின் மூலம் என்னை மீண்டும் கொண்டு வந்து விடலாம் என்று நினைத்து நம்பிக்கையோடு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றேன். அங்கே கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி என்னை நான் நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். அத்துடன் எனக்கு கொஞ்சம் பணமும் கொஞ்சம் பிரபலம் மட்டும் தான் இந்நிகழ்ச்சியின் மூலம் நான் எதிர்பார்த்தேன்.
நான் எதிர்பார்த்தது எனக்கு கிடைத்தும் கூட எனக்கு இருக்கும் சில பிரச்னைகளால் அதை என்னால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. நீங்கள் எனக்கு காட்டிய அன்பிற்கு பதிலளிக்க முடியாத நிலையில் நான் இருக்கிறேன். எனக்கு நீங்கள் கொடுத்த அனைத்து அன்பிற்கும் நன்றி. என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.
இருந்தும் எந்த பிரச்சனைக்காக பிக்பாஸ் வீட்டிலிருந்து கவின் வெளியேறினாரோ அந்த பிரச்சனை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவரது தாயின் நிலைமை என்ன என்று அறிந்துகொள்ள அவரது ரசிகர்கள் மிகுந்த கவலையுடன் கேட்டு வந்த நிலையில் தற்போது அது அத்தனைக்கும் விடை சொல்லும் விதத்தில் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அதில் அவரது தாய் மற்றும் பாட்டியுடன் கவின் இருப்பதாய் கண்டு அவரது ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர்.