பிக்பாஸ் முதல் சீசன் தமிழ்நாட்டு ரசிகர்கள் அதிகம் ரசித்த ஒரு நிகழ்ச்சி. காதல், சந்தோஷம், கலகலப்பு, சண்டை, பொறாமை என மனிதர்களுக்கு இருக்கும் எல்லா உணர்வும் அதில் வெளிப்பட்டது.
2வது சீசன் அவ்வளவாக கவரவில்லை என்பது ஊரறிந்த உண்மை. இதனால் சிலர் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதையே வெறுத்துவிட்டனர். அதனால் பிக்பாஸ் 3வது சீசன் நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்க விஜய் டிவி படாத பாடுபட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த வரம் முழுவதும் அழுகாச்சி வாரமாக முடிவடைந்தது. அதனை தொடர்ந்த இந்த வாரத்தின் முதல் நாளிலிருந்தே சண்டை சர்ச்சரவுமாக போய்க்கொண்டிருந்தது. இதனால் சற்று வெறுப்படைந்த பார்வையாளர்களுக்கு சற்று புதுவிதமாக ப்ரோமோவை வெளியிட்டுள்ளார்.
சற்றுமுன் வெளிவந்துள்ள இந்த ப்ரோமோ வீடியோவில் கும்கி யானை போன்ற ஒரு பள்க் மேனை ஒரு வண்டியில் அமரவைத்துவிட்டு அந்த வண்டியை கீழே தாழ்த்திவிட்டால் ஒரு தார் வாழைப்பழம் கொடுக்கப்படும் என்பது தான் அந்த டாஸ்க். இதனால் வனிதா வண்டியில் அமர்ந்திருக்கும் அந்த நபரை கிழே அமுக்க முயற்சிக்கிறார் இறுதியில் அவர் வென்றும்விடுகிறார். எப்போதும் அழுகையும் சண்டையுமாக சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் தற்போது வித்யாசமாக இருக்கிறது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.