Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காத்து வாக்குல ரெண்டு காதல் ரிலீஸ் எப்போது? விக்னேஷ் சிவன் போடும் கணக்கு!

காத்து வாக்குல ரெண்டு காதல் ரிலீஸ் எப்போது? விக்னேஷ் சிவன் போடும் கணக்கு!
, வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (09:43 IST)
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது.

இப்போது பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தை தீபாவளிக்கு 2 வாரங்கள் முன்னதாகவோ அல்லது தீபாவளிக்கு 2 வாரங்கள் பின்னதாகவோ ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாரி செல்வராஜ்& உதயநிதி ஸ்டாலின் படத்தில் சுணக்கம்!