நடிகர் ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்யா ஜோடியாக வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சித்தி இதானி நடித்திருக்கும் இந்த படத்தில் பிரபு, பாக்யராஜ், சிங்கம் புலி, நரேன், மதுசூதன ராவ் உள்பட பலன் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் ஜூன் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
மேலும் ரிலீஸ் தேதி உடன் வெளியான புதிய போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.