Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எவனோ ஒருவன் தனுஷை என் மகன் என்கிறான்: கஸ்தூரி ராஜா வேதனை

Advertiesment
எவனோ ஒருவன் தனுஷை என் மகன் என்கிறான்: கஸ்தூரி ராஜா வேதனை
, வியாழன், 1 டிசம்பர் 2016 (12:29 IST)
நடிகர் தனுஷ் யாருடைய மகன் என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது. நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் என மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாள் தம்பதியினர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இதற்காக அவர்கள் நீதிமன்றத்துக்கே சென்றுள்ளனர். தனுஷ் எங்களுடைய மகன் என்பதை நிரூபிக்க மரபணுசோதனை செய்யவும் நாங்கள் தயார் என கூறுகின்றனர் அந்த திடீர் பெற்றோர்கள். இந்த வழக்கில் நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.


 

இந்நிலையில் பார்க்க தோணுதே என்ற படத்தில் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் கஸ்தூரி ராஜா பேசியபோது,

எல்லாருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள்தான் . ஸ்ரீகாந்த்தேவா இங்கே இருக்கிறார். ஒருகாலத்தில் தேவாவின் இசையில் 5 படங்கள் இயக்கினேன். ஐந்தும் வெற்றி. அவர் மகன் இந்த  ஸ்ரீகாந்த்தேவா அப்போது கீபோர்டு பிளேயர். சாப்பாடு கூட அவரது ஒலிப்பதிவுக் கூடத்தில்தான்.  அவர்கள் வீட்டுச் சாப்பாடுதான்  சாப்பிடுவேன். அவ்வளவு சுதந்திரம் இருக்கும். இளையராஜாவால் பெரிய ஆளானவர்கள் பல பேர். நானும் அவரால் வளர்ந்தவன்.

என் மூத்தமகன் செல்வா என்னை  ஏன் கதாநாயகனாக்கவில்லை என்கிறான். தனுஷ் என்னை ஏன் நடிகனாக வைத்தீர்கள் என்கிறான். நான் முதல்படம் இயக்கியபோது ராஜ்கிரண் பெரிய கதாநாயகர்களிடமெல்லாம் என்னை அழைத்துச் சென்றார் .விஜயகாந்திடம் கதை சொன்னேன். மறுத்துவிட்டார். அது 'இரவுப்பூக்கள்'  சமயம் சத்யராஜிடம் கதை சொன்னேன். மறுத்துவிட்டார். அவர்களுக்கு என்மேல் நம்பிக்கை வரவில்லை. இப்படிப் பலவற்றை கடந்துதான் முதல் படம் எடுத்தேன்.

முதல்மகன் செல்வா பிறந்தது தனுஷ் பிறந்தது  எல்லாமே சுதந்திரமும் மகிழ்ச்சியும் தந்தவை. இப்போது தனுஷை எவனோ ஒருவன் என் மகன் என்கிறான்.  எனக்கு எவ்வளவு பிரச்சினை பாருங்கள்.  இன்று வசதிகள் இருந்தும் சுதந்திரமும் இல்லை; மகிழ்ச்சியும்  இல்லை என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சண்டக்கோழி 2 படத்தில் விஷால் ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்