2017 ஜனவரியில் சண்டக்கோழி 2 படத்தை தொடங்க லிங்குசாமி திட்டமிட்டுள்ளார். மோடி உருவாக்கிய பண நெருக்கடி காரணமாகத்தான் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, சண்டக்கோழியில் அவரது அப்பாவாக நடித்த ராஜ்கிரண் அதே வேடத்தை இதிலும் தொடர்கிறார். நாயகியாக கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர். சண்டக்கோழி 2 படத்துக்கு இமான் இசையமைப்பார் என்று லிங்குசாமி முதலில் அறிவித்திருந்தார். தற்போது மனதை மாற்றி தனது ஆஸ்தான யுவனையே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்.