தமிழகத்தில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் 100க்கும் மேல் அதிகரித்து வந்தாலும் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
குறிப்பாக சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அனைவரும் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து கொரோனா இல்லா மாவட்டமாக ஈரோடு மாவட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது
இதனை அடுத்து தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 42 பேர்களில் 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ச் செய்யப்பட்டுள்ளதால் கரூர் மாவட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக வெகுவிரைவில் மாற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா இல்லா மாவட்டமாக மாற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே நீலகிரி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்கள் கொரோனா இல்லா மாவட்டமாக விரைவில் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை திருப்பூர், செங்கல்பட்டு போன்ற முக்கிய நகரங்கள் தவிர மற்ற நகரங்கள் அனைத்துமே கொரோனா இல்லா மாவட்டமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும், இந்த ஐந்து மாவட்டங்கள் மட்டுமே கொரோனாவின் தீவிர பிடியில் சிக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது