சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 4 வது கட்ட பொது ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் திருவாடனை தொகுதி எம் எல் ஏ வுமான கருணாஸுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராமில் அரசு மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி நலமாக இருப்பதாக கூறியுள்ளார். இந்த வீடியோவில் ஆள் அடையாளமே தெரியாமல் மீசையும் தாடியுமாக இருப்பதை பார்த்து கவலையடைந்த இணையவாசிகள் அவர் விரைவில் குணமாகி வர பிரார்த்தித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ...