Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கு ஒரு குழந்தை ஏற்பாடு செய்வீர்களா? நடிகரிடம் கோரிக்கை வைத்த பிக்பாஸ் நடிகை

Advertiesment
எனக்கு ஒரு குழந்தை ஏற்பாடு செய்வீர்களா? நடிகரிடம் கோரிக்கை வைத்த பிக்பாஸ் நடிகை
, திங்கள், 4 நவம்பர் 2019 (21:30 IST)
பிக்பாஸ் தமிழ் 3 சீசன்கள் முடிவடைந்த நிலையில் இந்த மூன்று சீசன்களிலும் ஆரவ், ரித்விகா மற்றும் முகின் ஆகிய மூவருக்கும் சாம்பியன் பட்டங்கள் கிடைத்தது. இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து இந்த நிகழ்ச்சி தொடரும் என்றே கருதப்படுகிறது
 
இந்த நிலையில் பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டில் நுழைந்த  நடிகை காஜல் என்பது தெரிந்ததே. இவர் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முன்னாள் மனைவி என்பதும், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நடிகை காஜல் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க முடிவு செய்து அதற்கான வழிமுறைகளை தேடி வந்தார். இந்த சமயத்தில்தான் சுஜித் என்ற சிறுவன் மரணம் அடைந்ததை அடுத்து அந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய ராகவா லாரன்ஸ், ஒரு குழந்தையை தத்து எடுத்து அந்த குழந்தைக்கு சுஜித்  என்று பெயரிட்டு வளர்க்குமாறு ஆலோசனை கூறினார் 
 
இந்த ஆலோசனையை பார்த்த காஜல், தான் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு ராகவா உதவ வெண்டும் என்றும் அவர் உதவி செய்தால் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடனுடன் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
நடிகை காஜல் ஒரு குழந்தையை தத்தெடுக்க ராகவா லாரன்ஸ் உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிகாந்த் பிகில் படம் பார்த்தாரா? இணையத்தில் பரவும் வதந்தி