Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறு வயதில் இருந்தே அவர் எனக்கு ரோலக்ஸ்… அண்ணன் சூர்யா பற்றி கார்த்தி ஜாலி கமெண்ட்!

சிறு வயதில் இருந்தே அவர் எனக்கு ரோலக்ஸ்… அண்ணன் சூர்யா பற்றி கார்த்தி ஜாலி கமெண்ட்!

vinoth

, சனி, 21 செப்டம்பர் 2024 (14:59 IST)
96 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் தற்போது கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.  படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் ராஜ்கிரண் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள், கிளர்வோட்டம்(டீசர்) எல்லாம் மிக வித்தியாசமாக அமைந்தததால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் மெல்லிய உணர்வு கொண்ட குடும்ப உறவுகள் பற்றிய படமாக இருக்கும் என தெரிகிறது.

இதனையடுத்து கார்த்தி படத்தின் பரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அப்படி ஒரு நேர்காணலில் அவரின் அண்ணன் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் “ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் அவரை பார்த்தது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகதான் இருந்தது. ஆனால் சிறுவயதில் இருந்தே அவரை ரோலக்ஸ் ஆகதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் எவ்வளவு பெரிய வில்லன் என்று எனக்குதான் தெரியும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் & மணிரத்னம் காம்போவின் தக் லைஃப் பட ஷூட்டிங் நிறைவு!