Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்த்தியின் ''சர்தார்'', அட்லியின் ''ஜவான் '' இரண்டும் ஒரே கதையா?

Advertiesment
atlee vijay shahrukh
, சனி, 15 அக்டோபர் 2022 (18:31 IST)
நடிகர் கார்த்தியின் சர்தார் படத்தின் கதையும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படக் கதையும்  ஒன்று என தகவல் வெளியாகியுள்ளது.
.
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்தார். இரு வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இப்படத்தை   பிஎஸ் மித்ரன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு  ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.


 
இந்த படத்திற்கு  சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அக்டோபர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ள  நிலையில், நேற்று இரவு இப்படத்தின் டிரைலர் ரிலிஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில்,  அட்லி இயக்கத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்,  நயன் தாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின் கதையும், ஜவான் படத்தின் கதையும் ஒன்றுதான் என்ற தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகிறது.
webdunia


ஜவான் படத்தின் கதை  குறித்து, இதுவரை எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், இப்படி ஒரு தகவல் வெளியாகி வருவது ரசிகர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு படங்களும் வெளியான படங்களும் வெளியான பிறகுதான் இரு படங்களின் கதை பற்றித் தெரியவரும் என நெட்டிசன்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.

Edited by Sinoj


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''150 கோடி கிளப்பில்'' இணைந்த சூப்பர் ஸ்டாரின் படம்