Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தியின் ’’சுல்தான் ’’படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு !!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:15 IST)
கார்த்தி நடித்து தயாராகியுள்ள சுல்தான் படத்தின் டீசர் வெளியிடுவது குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் தற்போது சுல்தான் படம் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொங்கலுக்கு மாஸ்டருக்குப் போட்டியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  திடீரென்று பின்வாங்கியது.

இதனால் படத்தின் டீசரும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் டீசர் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் இன்று ( பிப்ரவரி 1ம் தேதி) திங்கட்கிழமை அன்று மாலை 5 மணிக்கு சுல்தான் டீசர் வெளியாவதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் கார்த்தியின் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் விதத்தில் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

இதில், டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா,நெப்போலியன் உள்ளிட்ட் நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படம் வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிடியில் வெளியாகவிருந்த இப்படம் நேற்று தியேட்டர்களின் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் தியேட்டரில் ரிலீஸ் செய்யப் படக்குழு முடிவெடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments