Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தொடங்கிய கார்த்தியின் ஜப்பான் பட ஷூட்டிங்!

மீண்டும் தொடங்கிய கார்த்தியின் ஜப்பான் பட ஷூட்டிங்!
, புதன், 11 அக்டோபர் 2023 (07:29 IST)
கார்த்தி நடிப்பில் அவரது 25 ஆவது படமாக உருவாகி வருகிறது ஜப்பான் திரைப்படம். இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதை முன்னிட்டு படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. படத்தின் முக்கியக் காட்சிகளுகாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமாக ஒரு கிராமத்தையே செட்டாக உருவாக்கி படப்பிடிப்பை நடத்தினர் படக்குழுவினர்.

அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகின்றனர் ஜப்பான் படக்குழுவினர். இந்த பாடல் காட்சியோடு மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 28 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா அஜித்? விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்!