ஒருவழியாக முடிவுக்கு வந்த கார்த்தியின் காலதாமதமான படம்!
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரெமோ’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், கார்த்தி நடிப்பில் ’சுல்தான்’ என்ற படத்தை இயக்கி வந்தார்
கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது என்றும், இந்த படம் தொடருமா என்பதே சந்தேகம் என்றும் வதந்திகள் பரவியது
ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தை கண்டிப்பாக முடிப்போம் என்றும் படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும் இந்த படம் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள் என்றும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் தற்போது மத்திய மற்றும் மாநில அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததை அடுத்து இந்த படத்தின் மீதி காட்சிகள் படமாக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது இதனை தனது டுவிட்டரில் கார்த்தி உறுதி செய்துள்ளார்
கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றும், விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது