Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்தியின் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கார்த்தியின் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
, வெள்ளி, 24 மே 2019 (18:48 IST)
'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வந்த 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் மே 30ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தின் செகண்ட்லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார்.
 
நாயகி, பாடல், ரொமான்ஸ், காமெடி என எதுவுமே இல்லாத இந்த படம் ஒரே ஒரு இரவில் நடக்கும் காட்சிகளை மையமாக கொண்டது. கார்த்தியும் அவரது நண்பர்களும் சிறையில் இருந்து தப்புவதுதான் இந்த படத்தின் இரண்டு மணி நேர கதை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
கார்த்தி, நரேன், தீனா, ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளியானது! யோகி பாபுவின் "தர்மபிரபு" ரிலீஸ் தேதி