Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு பிரஸ்மீட் இல்லை 1000 பிரஸ்மீட் கொடுக்க தயாராக இருக்கிறோம்.. விஜய் கட்சி ஆதரவாளர்..!

Advertiesment
Vijay Speech

Siva

, செவ்வாய், 9 ஜூலை 2024 (21:28 IST)
விஜய்க்கு அரசியல் கட்சி நடத்த தெரியவில்லை என்றும் ஒரு பிரஸ்மீட் கூட இன்னும் நடத்தவில்லை என்றும் அவர் ஒரே ஒரு பிரஸ்மீட் நடத்தினால் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆளூர் ஷா நவாஸ் பேட்டி அளித்த நிலையில் இந்த பேட்டிக்கு லயோலா மணி என்ற விஜய் கட்சி ஆதரவாளர் பதிலளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
 
ஆளூர் ஷா நவாஸ் அவர்களுக்கு வணக்கம். உங்களின் நேர்காணலை பார்த்தேன். தளபதி அவர்கள் குறித்தும், தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் தாங்கள் பேசியது வன்மத்தின் வெளிப்பாடாக பார்க்கிறேன்.
 
உங்களின் குரல் விசிகவின் குரல் போன்று தெரியவில்லை. வேறு ஒருவரின் குரல் போன்று தெரிகிறது. ஜனநாயக நாட்டில் கட்சி ஆரம்பிக்க எல்லாருக்கும் உரிமை உள்ளது. அந்த அடிப்படையில் தளபதி அவர்கள் கட்சி ஆரம்பித்து உள்ளார். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று குரல் கொடுத்து வருகிறார்.10 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறார்.
 
கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் மிகப் பெரிய மக்கள் பணி. அந்த மக்கள் பணியை தளபதி அவர்கள் செய்து வருகிறார். கல்விக்காக செய்யும் மக்கள் பணியை சிறுமைப்படுத்தும் விதமாக தாங்கள் பேசிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
 
உங்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று பேசுங்கள்.தமிழ்நாட்டில் உள்ள விளிம்பு நிலை மக்களின் நலன்களுக்காக 25 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருபவர் மரியாதைக்குரிய அண்ணன் திருமாவளவன் MP அவர்கள் முதலமைச்சராக வர வேண்டும் என்று பேசுங்கள். அதற்காக போராடுங்கள். யாரோ ஒருவர் மனசு குளிர வேண்டும் என்று பேச வேண்டாம்.
 
அரசியல் தெளிவில்லை என்று சொல்லிருப்பது நகைப்பாக உள்ளது. நீங்கள் தான் தெளிவில்லாமல் இருக்கிறீர்கள்.உங்களுடைய கட்சிக்காக பேசாமல் இன்னொரு கட்சிக்காக பேசி வருவதுதான் உங்களின் தெளிவா?. 
 
நீட் நுழைவு தேர்வு வேண்டாம் என்று சொல்வது கட்சியின் கருத்து என்று சொல்வதை விட மக்களின் கருத்து என்று சொல்லுங்கள்.  மக்களின் நிலைப்பாடு தான் எங்களின் நிலைப்பாடு.
 
திமுக நீட் வேண்டாம் என்று சொல்கிறார்கள் உடனே இவர்களும் வேண்டாம் என்கிறார்கள் என்று அரசியல் புரிதல் இல்லாமல் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
எல்லாவற்றையும் தமிழ்நாட்டிற்கு செய்ய திமுக இருக்கிறது என்று நீங்கள் சொல்வதை கேட்கும்போது திமுக என்று ஒரு கட்சி இருக்கும் போது எதற்கு விசிகவில் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் திமுகவிலேயே இருக்க வேண்டியதுதானே.
அவர்கள் யாரை எந்த இடத்தில் வைப்பார்கள் என்று உங்களுக்குத் தெரிய வாய்ப்பு உள்ளது.
 
தமிழ்நாட்டின் மண்ணுக்கான அரசியலை செய்ய வருகிறோம்.ஒன்றிய அரசை நாங்கள் எதிர்ப்பது இந்த தமிழ் மண்ணுக்கான அரசியல். மாற்றம் வேண்டும் என்று நினைப்பதுதான் ஜனநாயகம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 
 
அதிகாரம் ஒருவரிடத்தில் நீண்ட ஆண்டுகள் இருப்பது சர்வதிகாரம் என்று பொருள். சர்வதிகாரம் வேண்டாம் என்று அரசியல் பேசி வருகிறோம். சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம்,மத நல்லிணக்கம்,மாநில சுயாட்சி முழுமையாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதை நடைமுறை படுத்த உழைக்கிறோம்.
 
அரசியல் தெளிவு இருப்பதால்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், தந்தை பெரியார் அவர்களையும், ஐயா காயிதமில்லத் அவர்களையும் கொள்கை தலைவர்களாக உள்வாங்கி கொண்டு மக்கள் பணி செய்ய வருகிறோம். 
 
தளபதி அவர்கள் அரசியல் தெளிவோடு வருவதால்தான் நீங்கள் பதறிக் கொண்டு யாரையோ மகிழ்விக்க பேசி வருவது தெரிகிறது. நீங்கள் யாரை மகிழ்வித்தாலும் அவர்களை எதிர்ப்பது உறுதி. அவர்களிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டும். ஒரு பிரஸ்மீட் இல்லை 1000 பிரஸ்மீட் கொடுக்க தயாராக இருக்கிறோம்.
 
கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் சொல்ல  தயாராக இருங்கள்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டு பாகங்களாக வெளியாகிறதா சூர்யாவின் ‘கங்குவா’? தயாரிப்பாளர் தகவல்..!