கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

Siva
புதன், 4 ஜூன் 2025 (17:19 IST)
நடிகர் கார்த்தி தற்போது 'வா வாத்தியாரே ' என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு, 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும், 'கைதி 2' படம், ஹிட் 3 படம் என்பது உள்பட, ஒரு சில படங்களில் அவர் நடிக்க இருந்தாலும், அவரது அடுத்த படம் என்பது 'டாணாக்காரன்'   இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாக உள்ள படம்தான் என்று கூறப்படுகிறது.
 
இந்த படத்தை முழுக்க முழுக்க ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இது ஒரு மீனவ குடும்பத்தின் கதை என்பதால், ஒரு மீனவ கிராமத்தையே ராமேஸ்வரம் பகுதியில் செட் போடும் வகையில் கலை இயக்குனர் பணியாற்றி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
 
அதேபோல், ராமேஸ்வரம் கடற்கரை ஓர பகுதிகளிலும், ராமேஸ்வரம் கடலிலும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
 
இந்த படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்து தகவல் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments