Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தி ஹொத்தில்லா ஹோகா – தமிழகத்தை அடுத்து ட்ரண்ட் செய்யும் கர்நாடகம்!

Advertiesment
இந்தி ஹொத்தில்லா ஹோகா – தமிழகத்தை அடுத்து ட்ரண்ட் செய்யும் கர்நாடகம்!
, செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (09:34 IST)
இந்தி தெரியாது போடா என தமிழ்நாடு ட்ரண்ட் செய்ததை அடுத்து இப்போது கர்நாடகாவிலும் அது பரவ ஆரம்பித்துள்ளது.

இந்தி திணிப்புக்காக தமிழகமே ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்பட ஒருசில திரை நட்சத்திரங்கள் திடீரென இந்தி தெரியாது போடா மற்றும் ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ போன்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்களை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இந்த ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரண்ட் ஆனதை அடுத்து இப்போது கர்நாடகாவிலும் இதைப் பலரும் தொடங்கியுள்ளனர்.

இந்தி தெரியாது போடா என்பது போல இந்தி ஹொத்தில்லா ஹோகா என்ற ஹேஷ்டேக்கை கன்னடியர்கள் ட்ரண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் டிஷர்ட்களிலும் அந்த வாசகங்களை எழுதி அணிய ஆரம்பித்துள்ளனர். கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்கள் இந்த எதிர்ப்பில் களமிறங்கியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவால் மேலும் ஒரு தமிழ் நடிகர் பலி…. அதிர்ச்சியில் திரையுலகம்!