Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதெல்லாம் ஒரு படமா? அஜித் படத்தை கலாய்த்தாரா பிரபல நடிகர்!

Advertiesment
இதெல்லாம் ஒரு படமா? அஜித் படத்தை கலாய்த்தாரா பிரபல நடிகர்!
, ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (08:11 IST)
அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் தமிழில் மிகப் பெரிய ஹிட் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு பின்னர் அஜித்தின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது என்பதும், அவருடைய சம்பளம் கிட்டத்தட்ட 50 சதவீதம் உயர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விஸ்வாசம் படத்தை ரீமேக் செய்ய தெலுங்கு மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் பலர் முடிவு செய்தனர். இதனை அடுத்து இந்த படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை கன்னடத்தில் தயாரிக்க முடிவு செய்ததாகவும், இதனையடுத்து பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரிடம் பேசப்பட்டது. மேலும் அவருக்கு இந்த படத்தை போட்டுக் காட்டியபோது அவர் ’இதெல்லாம் ஒரு படமா? இதைப் போய் ரீமேக் செய்யணுமா என்று கேட்டதாகவும் இதனால் சத்யஜோதி குழுவினர் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது 
 
அதன் பின்னர் ’ஈட்டி’ என்ற படத்தை இயக்கிய ரவி அரசு சொன்ன கதை சிவராஜ்குமாருக்கு பிடித்து விட்டதாகவும் இந்த படத்தில் நடிக்க சம்மதம் என்று அவர் ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த  அறிவிப்பு மிக விரைவில் சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிடும் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் நடிகர் சிவராஜ்குமார் அஜித் படத்தை மோசமாக விமர்சனம் செய்தது குறித்து அஜித் ரசிகர்கள் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். ஆனால் இதுகுறித்து சிவராஜ்குமார் தரப்பினர் கூறியபோது ’அஜித்தின் விசுவாசம் படத்தை அவருக்கு யாரும் போட்டுக் காட்டவில்லை என்றும் எனவே விஸ்வாசம் படத்தை அவர் தவறாக விமர்சனம் செய்யததாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் முழுக்க முழுக்க தவறான தகவல் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யை அரசியலுக்கு அழைக்கு போஸ்டர் கிழிப்பு.... மனம் தளராமல் ஒட்டும் ரசிகர்கள்