நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் பட டீசர் சமீபத்தில் ரிலீசாகிப் பெரும் வரவேற்பைப்பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் 4 வது சிங்கில் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கர்ணன்.
இப்படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் கண்டா வரச்சொல்லுங்க, பண்டாரத்தி புராணம், திரெளபதி முத்தம் ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலானது. பண்டாரத்திப் புராணம் பாடலுக்கு எதிரான விமர்சனங்கள் வலுக்கவே மஞ்சனத்திப் புராணம் என மாற்றப்பட்டது.
இந்நிலையில், கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு தனது டுவிட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் 4 வது சிங்கில் #UttradheengaYeppov என்ற பாடல் நாளை ரிலீசாகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் தனுஷ் பட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,. இது டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.