Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரகாட்டகாரன் 2 எடுக்குற ஐடியா இருக்கு… இயக்குனர் வெங்கட் பிரபுவின் சூப்பர் ஐடியா!

கரகாட்டகாரன் 2 எடுக்குற ஐடியா இருக்கு… இயக்குனர் வெங்கட் பிரபுவின் சூப்பர் ஐடியா!
, திங்கள், 27 மார்ச் 2023 (16:27 IST)
தமிழ் வணிகா சினிமாவின் கிளாஸிக்குகளில் கரகாட்டக்காரன் படத்துக்கு நீங்காத இடம் உண்டு. 1989 –ல் வெளியான இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி மற்றும் செந்தில் எனப் பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் இன்றும் அனைவராலும் விரும்பிக் கேட்கப்பட்டு கொண்டு வருகிறது.

வெளியாகி 33 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் இருப்பதாக கடந்த ஆண்டு இயக்குனர் கங்கை அமரன் தெரிவித்திருந்தார்.. இது சம்மந்தமாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இடம்பெறுவார்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது இயக்குனரும் கங்கை அமரனின் மகனுமான வெங்கட் பிரபு சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய போது “கரகாட்டகாரன் 2 படத்தை எடுக்கும் ஐடியா உள்ளது. படத்தில் கதாநாயகனாக மிர்ச்சி சிவாவை நடிக்க வைக்க உள்ளதாகவும்” கூறியுள்ளார். இதை அவர் விளையாட்டாக சொன்னாரா இல்லை உண்மையிலேயே அப்படி ஒரு எண்ணம் உள்ளதா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிச்சை எடுக்கும் ஷங்கரின் உதவி இயக்குனர்.. யார் இந்த செல்வேந்திரன்?