Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாபா படத்தின் ஷூட்டிங்கின் போதே தோல்வியைக் கணித்தாரா கவுண்டமணி?

பாபா படத்தின் ஷூட்டிங்கின் போதே தோல்வியைக் கணித்தாரா கவுண்டமணி?
, செவ்வாய், 6 டிசம்பர் 2022 (09:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து தற்போது டிசம்பர் 12-ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளில் ‘பாபா’ படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் நேற்று பாபாப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது. ஆனால் டிரைலர் பார்த்த ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியே வெளிப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பே பாபா படத்தில் சில பில்டப் காட்சிகள் ரசிகர்களைக் கவரவில்லை. ஆனால் அந்த காட்சிகளைக் கூட இப்போதைய காலத்தில் டிரைலரில் வைக்க, அது சமூகவலைதளங்களில் ட்ரோல் ஆகி வருகிறது.

இந்நிலையில் பாபா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த கவுண்டமணி, ஷூட்டிங்கின் போதே இந்த படத்துக்கு எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் இந்த படம் எதிர்பார்க்கும் வெற்றியைப் பெறாது என கணித்துக் கூறியதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னது இந்த பாடலும் காப்பியா?... தீ தளபதி பாடல் குறித்து பரவும் ட்ரோல்கள்!