2.0 படத்தின் நஷ்டத்தால் காப்பானுக்கு வந்த சிக்கல் ! – நிதி நெருக்கடியில் லைகா !

திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (09:12 IST)
லைகா நிறுவனம் நிதிநெருக்கடியில் உள்ளதால் அவர்களின் அடுத்த தயாரிப்பான காப்பான் வெளியாவதில் புதிதாக சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்த 2.0 படம் உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்ததாக சொல்லப்பட்டாலும் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் விநியோகஸ்தர்களுக்கு லைகா நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் திரும்பத் தரவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதனால் காப்பான் படத்தை விநியோக முறையில் யாரும் வாங்கவேண்டாம் என விநியோகஸ்தர்கள் சங்கம் தங்கள் உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் 2.0  படத்தின் வரவு செலவுக் கணக்குகள் முடியும் வரை காப்பான் படம் வெளியாவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

சமீபத்தில் 2.0 படத்துக்கு சப்டைட்டில் பணிகளை மேற்கொண்ட குழுவினருக்கு இன்னும் சம்பளம் தரவில்லை என குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தீபாவளி தினத்தில் மோதும் விஜய்-விஜய்சேதுபதி படங்கள்