Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய கிரிக்கெட்டின் விதை! கபில்தேவ் படம் குறித்து முக்கிய அப்டேட் !

Advertiesment
இந்திய கிரிக்கெட்டின் விதை! கபில்தேவ் படம் குறித்து முக்கிய அப்டேட் !
, வியாழன், 24 ஜனவரி 2019 (11:49 IST)
இந்தியாவில் இன்று கிரிக்கெட்டை ஒவ்வொருவரும் நேசிப்பதற்கு விதையாக இருந்தவர் கபில்தேவ்.



தன்னம்பிக்கை நாயகனாக இன்று நாம் போற்றும் தோனி , எந்தப் பின்புலமும் இல்லாமல்  கடுமையாக உழைத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து இந்தியாவிற்கு உலக கோப்பையை வாங்கி தந்து பெருமை சேர்த்தார்  என்பதில் உங்களுக்கு எந்த ஐயப்பாடு இருக்காது   அதே போல்தான் சரியாக 36 வருடங்களுக்கு முன்பு 1983ஆம் ஆண்டு வலிமை வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்தியாவிற்கு உலக கோப்பையை பெற்றுத்தர காரணமாக இருந்தார் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் . ஆம் இன்றைய தோனியை போன்றவர் தான் அன்றைய கபில்தேவ். உயர்குடி மக்களின் விளையாட்டாக இன்றும் இருக்கும் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை அந்த காலத்தில் போராடிப் பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இன்று நாம் ஆர்வத்தோடு பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு காரண கர்த்தா   கபில்தேவ் தான். இவர் உருவாக்கிய ஐசிஎல் போட்டிக்கு போட்டியாக தான் பிசிசிஐ ஐபிஎல் போட்டியை கொண்டுவந்தது. கிரிக்கெட் தான் வாழ்க்கை என பலருக்கும் கனவுகள் உருவாக காரணமாக இருந்த நாயகன் கபில்தேவின் வாழ்க்கை வரலாறு #83 The Film என்ற பெயரில் படமாகிறது. 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இயக்குநர் கபீர் கான் இயக்கும் இப்படத்தில் ரன்வீர் சிங் கவிதை வேடத்தில் நடிக்கிறார். நம்ம ஊர் ஜீவா , முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கிறார்.  மது மட்டினா, விஷ்ணு இந்தூரி, கபீர் கான் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். ரிலையன்ஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் வெளியிடுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதியுடன் ஆரம்பித்து தலயுடன் அடிச்சு தூக்கிய இமான் !