பிரபல இசையமைப்பாளர் டி இமான் 1983 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இதே நாளில்தான் சென்னையில் பிறந்தார்.
பாய்ஸ் படத்தில் ஐந்து நபர்களில் ஒருவராக நடித்த இமான் தற்போது பிரபல தமிழ் படங்களின் இசை அமைப்பாளராக மாறிவிட்டார். மிகக் குறைந்த காலத்திலேயே 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மெலடி பாடல்கள் என்றால் அது இமான்தான் என்கிற அளவுக்கு மிக அற்புதமாக இசையமைத்து மக்களிடம் பெயர் பெற்றவர் இமான். கடந்த 2002ஆம் ஆண்டு விஜய், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து இவர் இசையமைத்த விசில் படத்தில் அழகிய அசுரா என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அர்ஜுன் நடித்த கிரி படத்துக்கு இசையமைத்தார். அதில் கையை வச்சுக்கிட்டு சும்மா இருடா என்ற பாடல் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 2010 ஆம் ஆண்டு வெளியான கும்கி படம் இமானுக்கு மெலடி புகழ் மன்னன் என்ற மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அடுத்தடுத்து வரிசையாக கும்கி ,கயல் , பாண்டியநாடு , ஜீவா என பல படங்களுக்கு இசை அமைத்தார். கடைக்குட்டி சிங்கம் ,டிக் டிக் டிக், சீமா ராஜா, விஸ்வாசம் என இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறார் இமான். இவர் கடைசியாக இசையமைத்த விசுவாசம் படத்தின் பாடல்கள் அமோக வரவேற்பைப் பெற்றன இவர் பாடிய அடிச்சு தூக்கு பாட்டு யூடியூபில் பட்டையை கிளப்பி வருகிறது. மெலடி மன்னனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.