ரூ.800 கோடி வசூல் செய்த 'காந்தாரா சாப்டர் 1': ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Mahendran
திங்கள், 27 அக்டோபர் 2025 (17:31 IST)
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த பிரமாண்டத் திரைப்படமான 'காந்தாரா சாப்டர் 1'-ன் ஓடிடி வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
கர்நாடக தொன்மத்தைப் பின்னணியாக கொண்ட 'காந்தாரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் முந்தைய கதையாக உருவான 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம், அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
 
திரையரங்குகளில் ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்த இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 31ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. இந்த படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கும்.
 
மேலும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு திரையரங்கில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையையும் 'காந்தாரா சாப்டர் 1' பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உன்னை அடிச்சுப் போட்டுட்டு பிக்பாஸ விட்டு போயிடுவேன்! தர்பீஸ் மேல் பாய்ந்த FJ! Biggboss Season 9

நீல நிற சேலையில் ஜொலிக்கும் சமந்தா… வாவ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த மிருனாள் தாக்கூர்!

நான் ராமராஜனுக்காகதான் அந்தக் கதையை எழுதினேன்… பல வருடங்கள் கழித்து மிஷ்கின் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments