Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ஸ்ருதி மீது கணவர் கொடூரத் தாக்குதல்.. தொடையில் கத்தியால் குத்தியதால் அதிர்ச்சி..!

Siva
ஞாயிறு, 13 ஜூலை 2025 (11:31 IST)
பெங்களூருவில் பிரபலமான கன்னட தொலைக்காட்சி நடிகை ஸ்ருதி மீது அவரது கணவர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாகவும், தொடை, விலா எலும்புகள், கழுத்து ஆகிய இடங்களில் கத்தியால் குத்தி, தலையை சுவரில் மோதி காயப்படுத்தியதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கன்னட நடிகை ஸ்ருதி தனது கணவர் அம்பரீஷிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் அவ்வப்போது நிதி தகராறுகள் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், ஸ்ருதியின் வீட்டிற்கு வந்த அவரது கணவர், அவர் மீது மிளகு ஸ்பிரே அடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். விலா எலும்புகள், தொடை, கழுத்து ஆகிய இடங்களில் கத்தியால் குத்தி, தலையை சுவரில் மோதியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது ஸ்ருதி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது கணவர் அம்பரீஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
அம்பரீஷ் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்றும், இருவருக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடந்ததாகவும், இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் தெரிகிறது. இருப்பினும், அடிக்கடி இருவருக்கும் இடையே குடும்ப சண்டைகள் வந்த நிலையில், சில மாதங்களாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 
 
ஏற்கனவே இருவருக்கும் ஒரு அடிதடி சண்டை நடந்தபோது, இது குறித்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், உறவினர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர். இந்த நிலையில், ஸ்ருதி தற்போது தனியாக வாழ்ந்து வரும் நிலையில், மீண்டும் அம்பரீஷ் அவரை கொடூரமாகத் தாக்கியதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். 
 
ஸ்ருதி ஒரு தொலைக்காட்சி சீரியல் நடிகை என்றும், 'அம்ருததாரே' போன்ற பிரபலமான தொடர்களில் அவர் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments