Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குவா படத்தின் VFX காட்சிகளில் அதிக கவனம் செலுத்தும் இயக்குனர் சிவா! காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (16:30 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் மிரட்டலான கிளிம்ப்ஸ் காட்சித்துணுக்கு சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. ஆனால் காட்சிகள் பார்ப்பதற்கு வீடியோ கேம்ஸ் பார்ப்பது போல உள்ளதாகவும் ஒரு விமர்சனம் எழுந்தது.

இதையடுத்து VFX காட்சிகளுக்கான பணியை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு இயக்குனர் சிவா காட்சிகளின் தரத்தை உயர்த்த சொல்லி அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஆதிபுருஷ் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகளும் இதுபோல ரசிகர்களிடம் விமர்சனங்களை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments